Cinema
லீக் ஆன ‘பீஸ்ட்’ புகைப்படங்கள்.. படக்குழுவினர் அதிர்ச்சி.. எப்போது எடுக்கப்பட்டவை தெரியுமா?
‘பீஸ்ட்’ புகைப்படங்கள் லீக் ஆகியிருப்பது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்ஸ் வெளியாகி வந்தது. சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்தது. வெளிநாட்டில் மிருகங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்று ஒரு புகைப்படம், தீவிரவாதி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் விஜய்யுடன் இருப்பது போன்று ஒரு புகைப்படம் ஆகியவை வெளியாகியுள்ளன.
இது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசிந்த புகைப்படங்களை யாரும் பகிரவேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !