Cinema
சென்னையில் புதுமனை புகுவிழா கொண்டாடிய மாரி செல்வராஜ்: நேரில் சென்று வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்!
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்வை திரையில் காண்பித்து வெற்றி இயக்குநராகியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இவர் தற்போது சென்னையில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார். அந்த புதுமனை புகுவிழா மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் முன்னிலையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா.ரஞ்சித் என தமிழ் திரையுலகத்தினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இப்படி இருக்கையில் மாரி செல்வராஜை அவரது புதிய வீட்டில் சந்தித்த நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!