Cinema
ஆஸ்கர் தகுதி பட்டியலில் ’ஜெய் பீம்’ : அதிகாரப்பூர்வ அறிவிப்பால் மட்டற்ற மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் 92 நாடுகளில் இருந்து 366 படங்கள் தேர்வாகியுள்ளது.
இதில் தேர்வாகும் படங்களின் நாமினேஷன் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து 2 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒன்று தமிழ் சினிமாவின் ஜெய் பீம் மற்றும் மலையாள சினிமாவின் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்மம்.
ஏற்கெனவே சூர்யாவின் ஜெய்பீம் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்து வந்துள்ள நிலையில் சினிமா உலகின் உயரிய விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய் பீம் இடம்பெற்றுள்ளது தமிழ் திரையுலகுக்கு பெருமையை கொடுத்துள்ளது.
தற்போது சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதுகள் பிரிவில் சூர்யாவின் ஜெய் பீம் தகுதி பட்டியலில் இணைந்துள்ளது. முன்னதாக சூர்யாவின் முந்தைய படமான சூரரைப் போற்று படம் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!