Cinema

2022 பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன? - PART 2

2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்களின் வரிசையின் தொகுப்பின் இரண்டாம் பாகம்.

வீரமே வாகை சூடும் (Tamil) - Jan 14

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `வீரமே வாகை சூடும்'. இதில் டிம்பிள் ஹயாதி, யோகிபாபுலாம் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கியிருக்கார். ஒரு சாமானியன், பணம் புகழ் அதிகாரம் இருக்கக் கூடிய ஆட்கள எதிர்த்தா என்ன ஆகும்ன்றதுதான் படத்தோட களம்.

வழக்கம் போல விஷால் படங்களுக்கே உரிய ஆக்ஷன் இதுல ஹெவியாவே இருக்கும்னு டீசர் பார்க்கும் போதே தெரியிது. கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்சிருக்கார். போன வருஷம் லாக் டவுன் சமயத்துல விறுவிறுப்பா தொடங்கி குறுகிய காலத்துலயே முடிக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி வெளியாக இருக்கு.

தேள் (Tamil) - Jan 14

பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரிராவ், யோகிபாபு நடிச்சிருக்கும் படம் `தேள்'. தூத்துக்குடி, மதுரை சம்பவம் மாதிரியான படங்கள்ல ஹீரோவா நடிச்ச ஹரிக்குமார் இந்தப் படம் மூலமா இயக்குநரா அறிமுகமாகறார். அம்மா சென்டிமென்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படமா உருவாகியிருக்கு இந்த தேள்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யா இசையமைச்சிருக்கார். போன வருஷம் டிசம்பர் மாசமே ரிலீஸ் ஆக வேண்டி இந்தப் படம் சில காரணங்களால தள்ளிப்போச்சு. இப்போ ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு.

AGP (Tamil) - Jan 14

லஷ்மிமேனன் லீட் ரோல்ல நடித்திருக்கும் படம் `AGP'. ரமேஷ் சுப்பிரமணியன் இந்தப் படத்தை இயக்கியிருக்கார். தமிழ்ல வர்ற முதல் female schizophrenia படம்ன்ற டேக் லைனோட வெளியாக இருக்கு. நடக்கறது எல்லாம் நிஜமா கற்பனையானு குழம்பக் கூடிய பாதிப்பு schizophreniaனு சொல்லப்படுது.

அந்த பாதிப்பு உள்ள கதாபாத்திரத்துல தான் லஷ்மி மேனன் நடிச்சிருக்காங்க. படத்துடைய டிரெய்லர் பார்க்கும் போது ஒரு சைகலாஜிகல் த்ரில்லரா இருக்கும்ன்ற நம்பிக்கைய குடுக்குது. இந்தப் படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகுது.

புத்தம் புது காலை விடியாதா (Tamil), Prime - Jan 14

போன வருஷம் அமேசான் ப்ரைம் ஒரிஜினலா வந்த ஆந்தாலஜி படம் `புத்தம் புது காலை'. இப்போ அதனுடைய செகன்ட் சீசனா `புத்தம் புது காலை விடியாதா' படத்தை ரெடி பண்ணியிருக்காங்க. முதல் பார்ட் மாதிரியே இந்த பார்ட்லயும் ஐந்து இயக்குநர்கள், ஐந்து குறும்படங்களை இயக்கியிருக்காங்க. ஹலீதா ஷமீம், பாலாஜி மோகன், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி, சூர்ய கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்த ஆந்தாலஜில, கௌரி கிஷன், தீஜே அருணாச்சலம், அர்ஜூன் தாஸ், லிஜோ மோல் ஜோஷ், ஜோஜூ ஜார்ஜ், நதியா, திலீப் சுப்புராயன், சனத், நிர்மல் பிள்ளை, ஐஸ்வர்ய லெஷ்மி நடிச்சிருக்காங்க. முதல் பாகத்தப் போலவே இதுலயும் ஆடியன்ஸுக்கு நம்பிக்கைய விதைக்கும்படியான கதைகளோட வந்திருக்கறதா அதனுடய இயக்குநர்கள் குறிப்பிட்டிருக்காங்க. இந்த ஆந்தாலஜி ஜனவரி 14ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்துல ரிலீஸ் ஆக இருக்கு.

இது கூடவே தியேட்டர்ல ஜவனரி 14ம் தேதி பாசக்கார பய', `ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' ஆகிய தமிழ்ப்படங்கள் வெளியாகுது. தெலுங்குல சூப்பர் ஹிட் படமான `சோக்காடி சின்னி நாயினா' படத்தோட இரண்டாம் பாகம் `பங்கார்ராஜூ' வெளியாகுது. அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படமான The Kings Man படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகுது. அதே தேதியில Indecent Proposal, Lolita ஆகிய படங்களை இயக்கின Adrian Lyne, இயக்கத்துல Deep Water படம் வெளியாகுது. கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு இவர் இயக்கியிருக்க படம்ன்றதால இதுமேலயும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.

இதில்லாம ஓடிடி ரிலீஸா ஜனவரி 13ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்ல Yeh Kaali Kaali Aankhein'ன்ற இந்திப் படம் வெளியாகுது, ஜனவரி 14ம் தேதி `Hotel Transylvania: Transformania'ன்ற ஹாலிவுட் படம் அமேசான் ப்ரைம்ல வெளியாகுது. The Tragedy of Macbeth'ன்ற ஹாலிவுட் படம் ஆப்பிள் டிவி ப்ளஸ்ல ரிலீஸ் ஆக இருக்கு.

இப்போ வரை இந்த லிஸ்ட்ல சொல்லப்பட்டிருக்கும் தியேட்டர் ரிலீஸ் எல்லாம், எப்போ வேணா மாற்றத்துக்கு உட்பட்டு தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்குன்றது குறிப்பிடத்தக்கது. சோ இந்தப் பொங்கலுக்கு அறிவிப்பக்கப்பட்டிருக்கும் எல்லா படங்களும் ரிலீஸ் ஆகுதானு பொறுத்திருந்துதான் பாக்கணும்.

Also Read: உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1