Cinema
மீண்டும் தள்ளிப்போனது ராஜமெளலியின் RRR பட ரிலீஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகுபலி படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது RRR.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி திரையுலக நடிகர்களும் சங்கமிக்கும் படமாக உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர்.
ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்த படம் எதிர்வரும் 7ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து மொழிகளிலும் புரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் மீண்டும் தள்ளிப்போவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆர்.ஆர்.ஆர். படம் 7ம் தேதி வெளியாகாது என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!