Cinema
’ஓ சொல்றியா’ பாடலில் ஆட சம்மதித்தது ஏன்? - நடிகை சமந்தா ஓபன் டாக்!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர் வெளியான ஓ சொல்றியா/ஓ அன்டவா பாடலால் சமந்தா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தெலுங்கு தமிழில் ஆண்கள் சங்கத்தினர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
புஷ்பா பட நிகழ்ச்சியின் போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜூன் பாடல் வரிகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாடலில் கூறியிருப்பது உண்மைதான என தெரிவித்திருப்பார்.
இந்த நிலையில் படம் ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்து வரும் வேளையில் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா ஆடிய பாடலை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.
தற்போது ஓ சொல்றியா பாடலுக்கு தான் ஆட ஒப்புக்கொண்டது பற்றி நடிகை சமந்தாவே மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ஓ சொல்றீயா பாடலில் ஆடுவதற்காக முதலில் இயக்குநர் சுகுமார் அணுகிய போது மறுத்ததாகவும், முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டேவும் ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதை சுட்டிக்காட்டியிருக்கிறாராம்.
அதனையடுத்து ஓ சொல்றியா பாடலில் ஆட சமந்தா சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த பாடலில் ஆடுவதற்காக சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!