Cinema
"95 நாட்களுக்குப் பிறகு நடந்த யாஷிகா" : மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கம்!
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே தனது தோழிகளுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அதிவேகமாக கார் ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில், நடிகை யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் எலும்புகள் உடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவு திரும்பிய யாஷிகாவுக்கு தோழியின் இறப்புச் செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து "என்னால்தான் நீ என்னோடு இல்லாமல் போவாய் எனும் நிலை வரும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை" என தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டு வந்திருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து மூன்று மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா முதல்முறையாக மருத்துவர்கள் உதவியுடன் நடைப்பயிற்சி செய்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா கிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில்,'குழந்தை நடை. 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் உறுதி. விரைவில் எந்தவிதத் துணையும் இன்றி வலிமையாக நடப்பேன் என்று நம்புகிறேன். என்னை மிகவும் நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர்களுக்கு நன்றி'' என்று யாஷிகா பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, நடிகை யாஷிகா நடைப்பயிற்சி பெற்று வரும் வீடியோ அவரது ரசிகர்கள் வைரலாகி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?