Cinema
ரிலீஸுக்கு முன்பே தொடங்கிய போட்டி: அடுத்த வாரம் வெளியாகிறதா ‘வலிமை’ டீஸர்..!
அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளாக ‘நாங்க வேற மாதிரி’ எனும் பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடலும் இணையத்தில் வைரலாகி ஹிட்டடித்தது, அதனை தொடர்ந்து ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகளை கவனித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதே தேதியில் ரஜினியின் அண்ணாத்த படமும் வெளியாவதால் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என கருதி ரிலீஸை டிசம்பருக்கு ஒத்திவைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படத்தின் டீஸரை அடுத்த வாரம் வெளியிட போனி கபூர் அலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 25 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி என்பதால் அந்த நாளை குறிவைத்து ரஜினியின் அண்ணாத்த படக்குழு படத்தின் முதல் சிங்கிளை வெளியிட திட்டமிட்டிருப்பதால் அதே நாளில் அஜித்தின் வலிமை டீஸரும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது விஸ்வாசம் - பேட்ட படங்களுக்கான மோதலை போன்று அமைந்து இரண்டு படங்களுக்கும் வியாபார ரீதியாக நஷ்டம் ஏதும் இல்லாமல் இருக்க வழி செய்துவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!