Cinema
”ஷங்கர் படத்தில் அஞ்சலி.. ரஜினி பட வசனத்தை டைட்டிலாக வைக்கும் சிவகார்த்திகேயன்?” : சினிமா துளிகள்!
ஷங்கர் படத்தில் நடிக்கும் அஞ்சலி
இயக்குனர் ஷங்கர் வசம் தற்போது ராம்சரணின் 15வது படம், அந்நியன் ஹிந்தி ரீமேக் ஆகிய படங்கள் உள்ளன. இதில் ராம் சரணின் 15வது படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபல சௌத் கொரியன் நாயகி பே சுசி ஒப்பந்தமாகியுள்ளார். இவரை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடம். அதனால் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாயகியாக நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை அஞ்சலி இரண்டாம் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் 2022 துவக்கத்திலிருந்து நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் பட தலைப்பான ரஜினி பட வசனம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிருக்கும் ‘டாக்டர்’ அடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து சிவா ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ ஆகிய படங்களில் கவணம் செலுத்தி வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது. புதுமுக இயக்குனர் அசோக் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு ரஜினியின் ஃபேமஸ் பஞ்ச் வசனங்களில் ஒன்றான ‘சிங்க பாதை’ என்பதை டைட்டிலாக வைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனை காக்க வைக்கும் சூர்யா
கோலிவுட்டில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கமலின் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் 20ஆம் தேதி காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்ட இவர்களுக்கு சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் இந்த படத்திற்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் வேலைகள் காரைக்குடியில் உள்ள பெரிய வீட்டில் தான் நடந்து வருகிறது அங்கு தான் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் எதற்கும் துணிந்தவன் பட ஷூட்டிங் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு கமல் தள்ளப்பட்டுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!