Cinema
படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் 'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
“'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.” என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேலு துறைகளின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் ஒன்றிய அரசு, ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவை பொதுமக்கள் கருத்திற்காக பத்து நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த புதிய வரைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய திருத்தம், திரைப்பட துறைக்கு கேடு விளைவிக்கும் என்றும், சினிமா துறையின் மீது ஒன்றிய அரசு உட்சபட்ச அதிகாரம் செலுத்த வழிவகுக்கும், கருத்துச் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், இந்தப் புதிய வரைவு, ஒன்றிய அரசு மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சூர்யா, கார்த்தி, விஷால், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள பதிவில், “'ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021' படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. தணிக்கையான படங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது அரசியல் நோக்கத்தோடு பழிவாங்கலுக்கு வழிவகுக்கும். இந்த பாசிச போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!