Cinema
அடுத்தடுத்து படங்கள் ஹிட்... அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய டாப்ஸி : கவலையில் தயாரிப்பாளர்கள்!
டாப்ஸி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 6 பாலிவுட் படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளதால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த டாப்ஸி இனி 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கத் திட்டமிட்டுள்ளாராம்.
நல்ல கருத்துள்ள கதையம்சம் கொண்ட படமாகவும் அதே வேளையில் தனது கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் படமாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் படம் ‘ராஷ்மி ராக்கெட்’. இது, விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை பேசும் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் கதையை தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி எழுதியுள்ளார். ஆகாஷ் குரானா இப்படத்தை இயக்கியுள்ளார். இதுவும், டாப்ஸிக்கு பெரிய ஹிட்டாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!