Cinema
இறுதிகட்டப் பணிகளில் இழுபறி.. தள்ளிப்போகும் ரிலீஸ்.. விரைவில் தேதியை மாற்றி அறிவிக்கப்போகும் ‘KGF 2’ டீம்
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படமாக வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்தது ‘கே.ஜி.எஃப்’. இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
இந்த வெற்றியை தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ படம் உருவாகியுள்ளது. ஜூலை மாதம் ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் கொரோனா காரணமாக இழுபறியாக இருப்பதால் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு ஆலோசித்து வருகிறது.
மேலும் கடுமையான ஊரடங்குக்குப் பின்னும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. அதனால் உடனடியாக இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்பதால் இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் குறைய வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு இவர்கள் இந்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் ‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!