Cinema
தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ‘ரௌடி பேபி’..? - மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்காக பேச்சுவார்த்தை!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து தனுஷ், அவரின் 43வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் முடிந்து ஷூட்டிங் செல்ல படக்குழு தயாராக உள்ளது.
இதனைத் தொடர்ந்து ‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இதுதவிர ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமாருடன் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 2 படம் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
பல படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளது, இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான ‘மாரி 2’ படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்திருந்தாலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ், அதனால் இந்த காம்போ மீண்டும் இணையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“சென்னை இராஜீவ்காந்தி மருத்துவமனையில் ‘நரம்பியல் துறை’ கட்டடம் விரைவில் திறக்கப்படும்!” : அமைச்சர் மா.சு!
-
“நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும்!” : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!