Cinema
‘மாநாடு’ முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாடத் தயாராகும் சிம்பு ரசிகர்கள்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியலை மையப்படுத்திய கதையால உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.
மாநாடு படத்தின் போஸ்டர் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸுக்காக இப்போது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சிம்பு அப்துல் ஹாலித் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சென்னையை சுற்றி இருக்கும் இடங்களில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் நடந்து முடிந்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பது உறுதியாகிருக்கிறது. ஏற்கனவே ரம்ஜான் ஸ்பெஷலாக திட்டமிடப்பட்ட இந்த சிங்கிள் ரிலீஸ் வெங்கட் பிரபுவின் அம்மா மறைவால் தள்ளிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த படத்தின் பாடல் உரிமைகளை யுவன் வாங்கியதைத் தொடர்ந்து முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அப்டேட் சிம்பு ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!