Cinema
‘ஜகமே தந்திரம்’ ட்ரைலர் முதல் OTT செல்லும் வித்யா பாலனின் ‘ஷெர்னி’ வரை.. சினிமா துளிகள்!
வெளியானது தனுசின்`ஜகமே தந்திரம்' ட்ரைலர்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `ஜகமே தந்திரம்'. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமா தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், நேரடியாக இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் என அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு.
அதன்படி படம் ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ்ல ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆல்ரெடி படத்துக்கான டீசர், ரகிட ரகிட பாடல், புஜ்ஜி, நேத்து என இரண்டு வீடியோ பாடல்களையும் ரிலீஸ் செய்திருந்தார்கள். இப்போதும் படம் ரிலீஸ் ஆகறதுக்கு கம்மியான நாட்கள் இருப்பதால், ப்ரமோஷன் வேலைகள் பரபரப்பா நடந்து கொண்டிருக்கிறது.
படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்தநிலையில இன்று படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இப்போ இந்த டிரெய்லரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மதுரையிலிருந்து லண்டன் செல்லும் டான், அவர் என்ன பிரச்சனையை சந்திக்கிறார்? என்பதுதான் கதைக் களமாக இருக்கும் என டிரெய்லர் பார்க்கும் போது புரிகிறது. இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல், இந்திய மொழிகள்லயும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கு. கூடவே ஆங்கிலத்துலயும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கு.
OTTக்கு போகும் 'வாழ்'?...
அருவி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் பிரபு. இவருடைய இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘வாழ்’. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு 2019 ஜூலையில் துவங்கியது. டிராவல் மியூசிக்கல் டிராமாவா படமாக உருவாகி இருக்கிறது.
பாடகர் பிரதீப் குமார் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸை நெருங்கிவிட்டது. படத்தை திரையரங்கில் வெளியிட சாத்தியம் இல்லை என்பதால், நேரடியாக ஓடிடியில வெளியிட இருக்கிறது படக்குழு.
வாழ் படத்தை சோனி லைவ் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தப் படம் யு/ஏ சான்றிதழோடு 1 மணிநேரம் 54 நிமிட படமாக தயாராகியிருக்கிறது. அருவி பெரிய ஹிட் என்பதால், வாழ் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வெளியானது வித்யா பாலனின் 'ஷெர்னி' படத்தின் டீசர்...
இந்தியில் முன்னணி நடிகை வித்யாபாலன். இவர் கணிதமேதை சகுந்தலா தேவியுடைய பயோபிக் படத்தில் நடித்திருந்தார். அது போன வருடம் ஜூலை மாதம் நேரடி ஓடிடி ரிலீஸா அமேஸான் ப்ரைம்ல வெளியானது. இப்போது அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது.
இப்போது வித்யா பாலன் நடித்திருக்கும் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு தயாராகிவிட்டது. அமித் மசூர்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும், இந்தப் படத்திற்கு `ஷெர்னி' என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் வித்யாபாலனுடன் ஷரத் செக்சேனா, முகுல் சத்தா, விஜய் ராஸ், நீரஜ் கபி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.
வித்யா பாலன் ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசராக படத்தில் நடித்திருக்கிறார். இப்போது படத்தின் சிறிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூன் 2ம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. படம் ஜூன் மாதம் அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான தேதி டிரெய்லரில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!