Cinema
வெகுநாள் காத்திருப்பால் டோரன்ட்டில் வெளியானது FF9 - அதிர்ச்சியில் செய்வதறியாது திணறும் படக்குழு!
Justin Lin இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9. உலகம் முழுக்க FF பட சீரிஸ்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புக்குறிய படமாக இருக்கிறது இந்த சீரிஸின் லேட்டஸ்ட் பாகமான F9. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் முடிந்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்துட்டு வருகிறது.
2017ல வெளியானது இந்த பட சீரிஸின் எட்டாவது பாகம் அதனுடைய தொடர்ச்சியாக, அதாவது எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது பாகங்கள் மூன்றும் ட்ரையாலஜியாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன் படி தான் FF9 மற்றும் FF10 உருவாகி வருகிறது. ஒன்பதாவது பாகத்தை இயக்கியிருக்கும் Justin Lin தான் 10வது பாகத்தையும் இயக்க இருக்கிறார். Fast and Furious 9 படம் கடந்த வருடம் மே மாதமே ரிலீஸாக வேண்டியது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இப்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இணையத்தில் பலரும் இந்தப் படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர்.
இதனை அறிந்த படக்குழு பெரிய அதிர்ச்சியில் உள்ளது. திரையரங்கத்தில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருந்த படக்குழு, படம் இணையத்தில் பைரஸியாக வெளியாகியிருக்கும் இந்த சூழலில் என்ன முடிவு எடுக்க இருக்கிறார்கள் என்பதே எல்லோரின் கேள்வியாக உள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !