Cinema
அதிரடி நாயகனுடன் கைகோர்க்கும் காமெடி பட இயக்குநர்?
அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்தவர் நடிகர் அருண் விஜய். இவருடைய கரியரில் அஜித் உடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரொம்பவும் முக்கியமானது. விக்டர் கதாபாத்திரத்துக்கு பிறகு அருண்விஜய் வேற லெவலுக்கு போனார்.
அந்தப் படத்துக்கு பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். அதே சமயத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஹீரோவாக இவர் ஜெயித்ததிற்கு மகிழ்திருமேனி ரொம்பவும் முக்கியமான காரணம். மகிழ்திருமேனி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளியான எல்லாப் படங்களுமே ஹிட் அடித்தன. தொடர்ந்து த்ரில்லர் ஜானர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, அடுத்ததாக அறிவழகன் இயக்கத்தில் `பாடர்' படம் ரிலீஸ்க்குத் தயாராக உள்ளது.
இப்போது அருண் விஜய் அடுத்ததாக பக்கா காமெடி, சென்டிமென்ட் இயக்குனரான ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது ராதாமோகன் இயக்கத்தில் மலேசியா டூ அம்னீஷியா படம் ஜீ5-யில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அருண் விஜய் மற்றும் ராதா மோகன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
Also Read
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
-
“3 மாதத்தில் முதலமைச்சருக்கு வந்த பயம்.. சுதந்திர தின உரையா இது?” : வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!