Cinema
அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான மியூசிக் வீடியோ!
ஊரடங்கு காலத்தில் வெப் சீரிஸ்கள், படங்களை ஓ.டி.டி தளங்களில் ரிலீஸ் செய்வது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல, இன்னொரு விஷயத்தையும் பரபரப்பாக பலரும் செய்துவருகிறார்கள். அதுதான் மியூசிக் வீடியோ.
கவின் - தேஜூ அஸ்வின் நடிப்பில் அஸ்க்கு மாரோ பாடல் வெளியானது. அதற்கு தரண் இசையமைத்திருந்தார். அஸ்வின் - ரெபா மோனிகா நடிப்பில் குட்டி பட்டாசு பாடல் வெளியானது. இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார்.
அடுத்ததாக அஷ்வின் - தன்யா நடிப்பில் க்ரிமினல் க்ரஷ் பாடல் வெளியானது. அனிருத் பாடியிருந்த இந்தப் பாடலுக்கு காட்சன் இசையமைத்திருந்தார். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு பாடல் இணைந்திருக்கிறது.
போட்டும் போகட்டுமே என்ற இந்தப் பாடலில் அர்ஜூன் தாஸ் - லாவண்யா திரிபாதி நடித்திருக்கிறார்கள். இந்த மியூசிக் வீடியோ நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. சத்யஜித் ரவி - ஜென் மார்டின் இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியும் இருக்கிறார்கள்.
இதுவரை இந்த பாடல்களை, படத்திற்கு இசையமைத்தவர்கள் செய்திருந்தார்கள். ஆனால், இந்த முறை இன்டிபென்டன்ட் கலைஞர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.
Also Read
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?