Cinema
ஷங்கர் படத்துக்கு வசனம் எழுதும் பாடலாசிரியர் விவேக் - RC15 புது அப்டேட்!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தொடங்கப்பட்டு இப்போது அப்படியே நின்று போன படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிப்பில் துவங்கப்பட்ட இதில் பல பிரச்சனைகள் காரணமாக அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல முடியாமல் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தன்னுடய அடுத்தடுத்த படங்களை வரிசையாக கமிட் பண்ணிக் கொண்டே வருகிறார் ஷங்கர். பொதுவாக ஒரு படத்தை துவங்கினால், அந்த படத்த முடித்துவிட்டு தான் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்குவார் ஷங்கர்.
ஆனால், இப்போது வரிசையாக அவர் படங்கள் கமிட் ஆகி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கில் ராம் சரண் நடிக்க இருக்கும் 15வது படத்தை இயக்க பிப்ரவரி மாதம் ஒப்பந்தமானார் ஷங்கர், அதைத் தொடர்ந்து, இந்தியில் அந்நியன் ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இப்படி அடுக்கடுக்காக தன்னோட படங்களில் கவனம் செலுத்தி வரும் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்துக்கான திரைக்கதை மற்றும் வசனம் எழுத பிரபல பாடலாசிரியர் விவேக்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
தமிழில் விவேக் எழுதிய பல பாடல்கள் வெற்றியடைஞ்சு, மக்கள் மத்தியில பிரபலமாக இருக்கிறது. மேலும் பாடலாரிசிரியர் என்பதைத் தாண்டி, தனுஷின் 43வது படம், அதாவது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும், ஸ்க்ரிப்டில் பணியாற்றுகிறார் விவேக்.
இப்போது அந்தப் படத்தைத் தொடர்ந்து ஷங்கரின் படத்திலும் பணியாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது, இந்த படத்துக்கான ஷூட்டிங் 2022 ஆரம்பத்துல துவங்கி 2022 கடைசியில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!