Cinema
2வது முறையாக நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற தனுஷ்... தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிப்பு!
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 2019ல் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிப்பிற்காக தனுஷ் பெறும் இரண்டாவது விருதாகும்.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிப்பதிவாளர் விருது பெறுகிறார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது நாக விஷாலுக்கு, ‘கேடி என்கிற கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!