Cinema
வெளியானது ‘மாஸ்டர்’ டீஸர் - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து திரையரங்குகளில் வெளியாகத் தயார் நிலையில் உள்ளது.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தள்ளிப்போய், தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘மாஸ்டர்’ படக்குழுவினர் இன்று படத்தின் டீஸர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி #MasterTeaser ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!