Cinema
“இத நாம அனுபவிச்சுதான் ஆகனும்” - உலகுக்கு எஸ்.பி.பி. சொன்ன கடைசி மெசேஜ்!
பன்மொழி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் அவர் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. அவரது மறைவு செய்தியறிந்த கோடானக் கோடி ரசிகர்கள் அனைவரும், சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி. பாடின பாடல்களை பகிர்ந்து அவரை நினைவுப்படுத்தி வந்தனர். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பி. கடைசியாக இசை மேடையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக இசை தினத்தை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 18ம் தேதியன்று டோக்கியோ தமிழ் சங்கம் சார்பில் முரளியின் மெளனராகம் என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பங்கேற்று பாடல்களை பாடிய எஸ்.பி.பி. கொரோனா குறித்தும் பேசியிருந்தார்.
அப்போது, “உலகளவில் எக்கச்சக்கமான இசை மேடைகளில், ரசிகர்கள் முன்னிலையில் பாடியுள்ளேன். ஆனால், தற்போது ரசிகர்கள் இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் பாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த நிலையும் மாறி வெவ்வேறு இடங்களில் இருந்துக்கொண்டு கூட பாடவும், இசைக்கவும் செய்யலாம் என்ற சூழல் உருவாகும்.
யாரும் கொரோனா வைரஸை பற்றி தவறாக பேசாதீர்கள். இயற்கைக்கு நாம் செய்த வஞ்சகத்தால்தான் தற்போது நாம் அனைவருக்கும் இந்த சாபக்கேடான நிலை ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் நமக்கு அழகான பூமி, காற்று, தண்ணீரை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் பாழாக்கிவிட்டு, அடுத்த தலைமுறைக்கு வெறும் சுடுகாட்டை தருகிறோம்.
என் ஊர், என் ஜாதி, என் மதம் இப்படியெல்லாம் சாதாரண மனிதர்கள் பேசுவார்கள். புத்திசாலிகளாக இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதை பகிர்ந்தளிக்களாம். அப்படி முடியவில்லை என்றால் தீமை செய்யாமல் இருந்தால் போதும்.” என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசியிருந்தார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!