Cinema
ஊரடங்கு காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திய நடிகர் அஜித்! - என்ன செய்தார் தெரியுமா?
கொரோனா கால ஊரடங்கு பலரை வீட்டுக்குள்ளேயே முடக்கியது. இதற்கு பெரும் அரசியல்வாதிகளிலிருந்து, சினிமா நடிகர்கள் வரை எவரும் விதிவிலக்கல்ல.
பலர் தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த அனுபவத்தை எதிர்கொள்ள முடியாமல் டி.வி, வெப் சீரிஸ் என மூழ்கி இருக்க, சிலர் மட்டும் இந்த காலகட்டத்தை மிகுந்த பயனுள்ளதாக புதிய நல்ல பழக்கங்களை, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளனர்.
அப்படி தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜித், இந்த ஊரடங்கு காலத்தை ஒரு மலர் பூங்கா அமைப்பதற்காகச் செலவழித்துள்ளார். எப்போதும் ஏதோ ஒரு புதிய துறையில் ஆர்வம் ஏற்பட்டு அத்துறையை பற்றி கற்றுக்கொண்டு பின்பு அதில் தன் திறமையை வளர்த்துக்கொள்ளும் அஜித் இந்த தடவை பூங்கா அமைப்பதை தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் தன் வீட்டின் பின்பக்கம் உள்ள இடத்தை பூத்துக்குலுங்கும் நந்தவனமாக மாற்றியுள்ளார் அஜித். அந்தப் பூங்காவில் 75 வகையான மலர் இனங்களை அஜித் வளர்த்துள்ளார்.
ஐஐடியின் தக்ஷா என்ற குழுவுக்கு ஆலோசகராக உள்ள அஜித் அந்த அணியின் மூலம் கொரோனா பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கும் டிரோனை வடிவமைத்துத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அப்படப்படிப்பை, தொற்று குறைந்த பிறகு மீண்டும் வைத்துக்கொள்ளலாம் என அஜித் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!