Cinema
மக்களின் மனதைக் கொள்ளையடிக்க ‘மாஸ்டர்’ பட வாய்ப்பை மறுத்த ‘குக் வித் கோமாளி’ புகழ் : மைல்ஸ் டூ கோ நண்பா !
தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது வழக்கம். அதிலும் சமையல் தொடர்பான நிகழ்ச்சி என்றாலே பொதுவாக பெண்களிடமே வரவேற்பு கிடைக்கும். ஆனால், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் Cook'u with comali நிகழ்ச்சிக்கு நண்டு சிண்டு முதல் ரசிகர்கள் இருக்கின்றனர்.
திரை நட்சத்திரங்கள் குக் ஆகவும், நிகழ்ச்சியை களைகட்ட வைக்க கோமாளிகளாக நகைச்சுவை நடிகர்களும் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை அனைத்து வயதினரும் விரும்பி பார்ப்பதற்கு மூலக் காரணமாக இருப்பது கோமாளி ‘புகழ்’தான்.
அவரது வசன உச்சரிப்பு மட்டுமில்லாமல், உடலசைவுகளின் மூஅம் பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறார் புகழ். சாதாரண கூலித் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய புகழ், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடிப்பதற்காக 40 நாட்கள் கால்ஷீட்டு கேட்டு படக்குழு குக் வித் கோமாளி ‘புகழ்’-ஐ அணுகியுள்ளனர். ஆனால், மாஸ்டர் படத்தில் நடிக்க புகழ் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள புகழ், “விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.
ஆனால், மக்கள் முன்னிலையில் இந்த அளவுக்கு நான் பிரபலமானதற்கு காரணமாக இருந்த விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் போக விரும்பவில்லை. அதனாலேயே மாஸ்டர் படத்துக்கு நாட்கள் ஒதுக்க முடியவில்லை.
மேலும், அந்தப் படத்தில் நடிக்க முடியை வெட்ட வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்கள். அப்படி முடியை வெட்டிவிட்டால், திடீரென சூட்டிங் ஸ்பாட்டில் என்னை அடையாளம் தெரியாத அசிஸ்டெண்ட் டைரக்டர் யாராவது என்னை ’பின்னால் போய் நில்’ என்று சொல்லிவிட்டால், என் முகம் மக்களுக்குத் தெரியாமலே போய்விடும் வாய்ப்பும் இருந்தது. அதனால், கனத்த மனதுடன் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.
லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்திருந்தேன். அதில் என் முகம் தெரியாது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை உடனே விட்டுக்கொடுக்க மனமில்லை” என கூறியிருக்கிறார். இது ரசிகர்களின் மனதில் புகழின் மீதான இமேஜை இன்னும் உயர்த்தி இருக்கிறது.
சின்னத்திரையில் இருந்து மக்களின் அபிமானம் பெற்று, பெரிய திரைக்குச் சென்று இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருக்கும் சிவகார்த்திகேயன் தொடங்கி, மா.க.பா, பிரியங்கா, டிடி, சந்தானம் என விஜய் டி.வி அறிமுகப்படுத்தி வைத்த பிரபலங்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வரிசையில் தற்போது புகழும் இணைந்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!