Cinema
‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிப்பது உறுதி... இசையமைப்பாளர் இவர்தானா?
பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார் ஆயுஷ்மான் குரானா. அவரது திறமைக்குத் தீனி போடும் வகையிலான கதைகளையும், மக்கள் விரும்பும் வகையிலான வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
விக்கி டோனர் முதல் பாலா வரை பல படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களாகவே அமைந்தது. குறிப்பாக ஆர்ட்டிகள் 15, அந்தாதுன் உள்ளிட்ட படங்கள் அனைத்து சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்தது.
அதில், 2018ம் ஆண்டு வெளியான ‘அந்தாதுன்’ படம் சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படம் என மூன்று பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. சீன மொழியிலும் வெளியாகி சக்கப்போடு போட்டது. வசூலிலும் எந்த குறையுமில்லாமல் இருந்தது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய நடிகரும் இயக்குநருமான தியாகராஜன், படத்தின் நாயகனாக தனது மகனும் நடிகருமான பிரசாந்தே நடிக்கவுள்ளார் என்றும் அறிவித்தார்.
அதுபோக, அந்தாதுன் ரீமேக்கை ஜெயம் (மோகன்) ராஜா இயக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
தற்போது, படத்தின் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தியாகராஜனும், இளையராஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இதற்கு இளையராஜா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்தாதுன் படத்துக்கு பீத்தோவன் இசையே உற்ற துணையாக இருந்ததால், அதற்கு சிறிதும் குறைவில்லாமல் தமிழ் ரீமேக் இருக்கவேண்டும் என்பதால் படக்குழு இளையராஜாவை தேர்ந்தெடுத்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் இளையராஜா பீத்தோவன் இசையை மறு உருவாக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் ஊடகங்களின் முன்னிலையில் அறிவிக்கப்படும் என்று ஏற்கெனவே தியாகராஜன் தரப்பு தெரிவித்திருந்தது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!