Cinema
இளையராஜா பயோபிக் : இசைஞானியாக தனுஷ் - யுவன் வெளியிட்ட பரபரப்பு தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை சினிமாவாக எடுப்பது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பிரபலமானவர்களின் கதையைப் படமாக எடுப்பது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் அது போன்ற பயோபிக் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள, இன்றளவும் இசையமைத்து வரும் சினிமாவின் இசைஞானியாக போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைப் பயணம் குறித்து படம் எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா ஏற்கெனவே படம் இயக்கவேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், தான் இயக்கவிருக்கும் முதல் படம் இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தை கொண்டதாக இருக்கும் எனவும், அந்தப் படத்திற்கு "Raja the Journey" என பெயரிடப்படும் எனவும் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிப்பதில் தனுஷ் கச்சிதமாக பொருந்துவார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
இசைஞானியின் பயோபிக்கை யுவன் ஷங்கர் ராஜாவே இயக்கவிருப்பதாகவும், அதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!