Cinema
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் லைகா : ரஜினி ’தர்பார்’ ரிலீஸில் சிக்கல் ?
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் ’தர்பார்’. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற, ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ரஜினியின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த TMY கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ரஜினிகாந்த் நடித்திருந்த 2.O படத்தின் மலேசிய விநியோக உரிமையை லைகா நிறுவனத்திடம் இருந்து 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், படத் தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆகையால், தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை லைகா நிறுவனம் வழங்காவிட்டால் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2 ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!