Cinema
பாகுபலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்த விஜய்யின் பிகில்!
பெண்கள் கால்பாந்த விளையாட்டை மையப்படுத்தி வெளியான படம் விஜயின் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு, இந்துஜா, ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த பிகில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் உலகளவில் சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியலிலும் பிகில் படம் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களின் பட்டியலில் இடம்பெற்றது. இது மட்டுமல்லாமல் 2019ம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியான ராஜமவுளியின் பாகுபலி படங்களில் பாகுபலி 2 தமிழகத்தில் மட்டும் 76 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை முன்னிலை வகித்து வந்தது. இதற்கடுத்து எந்த படமும் பாகுபலி 2 கலெக்ஷனை தமிழகத்தில் ஈடுகட்டவில்லை
தற்போது உலக அளவில் தமிழ் பட வசூல் பட்டியலில் முதலிடத்தில் உள்ள விஜயின் பிகில் தமிழகத்தில் பாகுபலி 2 வசூலை முறியடித்து ரூ.80 கோடி வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!