Cinema
அஜித்துக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை : ‘வலிமை’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!
‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இயக்கவுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
அக்டோபர் மாதம் பட டைட்டில் அறிவிப்புடன் தொடங்கிய இப்படத்தின் பூஜைக்குப் பிறகு வேறெந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அண்மையில் நடந்த விருது விழாவில் பேசிய போனி கபூர் வலிமை படம் போலிஸ் சார்ந்த கதையாக உருவாகவுள்ளது எனத் தெரிவித்ததோடு படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் எனவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து ட்விட்டரில் #ValimaiStartsOnDec13 என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அப்போது படக்குழு குறித்து முழுத் தகவலும் தெரிவிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது.
இந்நிலையில், அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திலும் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடித்திருந்தார், அதேபோல் இதிலும் இந்தி நடிகையையே நடிக்க வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக தமிழில் கவுரவம் மற்றும் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய இரண்டு படங்களில் யாமி கவுதம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.97 கோடி- 56000 சதுர அடி: சென்னையில் மக்கள் வசதிக்காக புதிய கட்டடத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றவாளி... வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
-
"4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்"- முதலமைச்சர் பெருமிதம்!
-
187 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு... விமானியின் சாதுரியத்தால் அவசரமாக தரையிறக்கம் !
-
பீகார் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட மோடி, நிதிஷை விட தேர்தல் ஆணையத்துக்கே தகுதி உள்ளது - முரசொலி விமர்சனம்!