Cinema
“நான் தென்னிந்திய நடிகை” - இந்தியில் பேசச்சொன்ன செய்தியாளருக்கு பதிலடி கொடுத்த சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும் தனக்கும், கதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் சமந்தா அவ்வப்போது தான் நடித்த படங்களுக்கான புரோமோஷன் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை சமந்தா பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.
அப்போது தெலங்கானா என்கவுன்டர் குறித்து பதிலளித்த அவர், அதில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை இந்தியில் பதிலளிக்கும்படி கூறிய செய்தியாளரிடம், தனக்கு இந்தி நன்றாகவே தெரியும் எனக் கூறிய சமந்தா, “தென்னிந்தியாவில் பிறந்தவள் என்பதால் இந்தியில் உச்சரிப்பது சரளமாக இருக்காது” எனக் கூறிவிட்டு ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.
இதேபோல், அண்மையில் கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்ஸியிடமும் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியில் பேசும்படி கேட்டதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்தது மிகவும் பிரபலமானது.
Also Read
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!