Cinema
‘விஜய் 64’ படத்தின் டைட்டில் என்ன? - வெளியான தகவலுக்கு விளக்கமளித்த ‘சம்பவம்’ பட இயக்குநர்!
‘விஜய் 64’ படத்துக்காக சென்னை, டெல்லி என ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளது படக்குழு. ‘கைதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதாலும் விஜய் 64 மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அவ்வப்போது, படப்பிடிப்பின்போது விஜய் நடிக்கும் புகைப்படங்களும் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும், படத்துக்கு தலைப்பு ஏதும் வைக்கப்படாததால் தளபதி 64 / விஜய் 64 என அழைக்கப்பட்டு வருகிறது.
விஜய் 64 படத்துக்கு ‘சம்பவம்’ என டைட்டில் வைக்கப்படவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனையடுத்து, சம்பவம் என்ற பெயரில் போஸ்டர்களை தயார் செய்து ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரஞ்ஜித் பாரிஜாதம் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிக்கும் ‘சம்பவம்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில், பூர்ணா , ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ‘விஜய் 64’ படத்துக்கு ‘சம்பவம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து இயக்குநர் ரஞ்ஜித் பாரிஜாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் ஏற்கெனவே சம்பவம் என்ற டைட்டிலில் முறையாக பதிவு செய்து ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறேன். இந்நிலையில், விஜய் 64 படத்துக்கு சம்பவம் என தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘சம்பவம்’ டைட்டில் எங்களுக்குச் சொந்தமானது. எனவே விஜய் 64 தலைப்பு பற்றி வெளியாகும் செய்தியை நம்பவேண்டாம்” என ரஞ்ஜித் பாரிஜாதம் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!