Cinema
ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு : அடுத்த படத்துக்கான அடித்தளமா?
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் படங்களை பார்த்துவிட்டு அதன் படக்குழுவினரை செல்போனிலோ அல்லது நேரில் வீட்டுக்கு அழைத்தோ பாராட்டி, வாழ்த்து சொல்வது ரஜினிகாந்தின் வழக்கம்
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வெளியான லோகேஷ் கனகராஜின் படத்தை பார்த்துவிட்டு அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் அந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் 64 படத்தின் ஷூட்டிங்காக டெல்லியில் இருந்ததால் நேரில் வர இயலாமல் போய்விட்டது.
தற்போது படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விஜய் 64 படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்துக்காக வாழ்த்து கூறிய ரஜினிகாந்துக்கு லோகேஷ் நன்றி தெரிவிப்பதற்காக சந்தித்துள்ளார்.
தற்போது இருவரின் சந்திப்பும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு இதேபோன்று சிறுத்தை சிவாவை அழைத்து ரஜினி பாராட்டியுள்ளார்.
அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றும் படத்தின் அறிவிப்புகள் வெளியானது. அதேபோல, லோகேஷ் கனகராஜ், ரஜினி சந்திப்புக்கு பின்னால் பட உருவாக்கம் குறித்த ஆலோசனையில் ஈடுபடலாம் என பேசப்படுகிறது.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!