Cinema
ஃபர்ஸ்ட் லுக்குடன் தரமான ‘சம்பவம்’ செய்யவிருக்கும் விஜய்64 படக்குழு!
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சென்னை, டெல்லி என உருவாகி வருகிறது ‘விஜய் 64’. இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்டனி வர்கீஸும் வில்லனாகவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ‘விஜய் 64’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சில தலைப்புகளை தேர்வு செய்துள்ளதாகவும், படக்குழு சென்னை திரும்பியதும் அதில் ஒன்றை முடிவு செய்து ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி தலைப்புடன் சேர்ந்த ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தின் கதை, டைட்டில் குறித்து பல்வேறு செய்திகள் வந்ததால் படக்குழு அவற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் விஜய் என்னவாக நடிக்கிறார், படத்தின் அடுத்தத்தடுத்த அப்டேட் என்ன என்பதை தெரிந்துகொள்வதில் ஆவலுடன் இருக்கின்றனர்.
தற்போது, லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்த டைட்டிலில் ஒன்றாக ‘சம்பவம்’ என்ற தலைப்பும் அடக்கம் என கூறப்படுகிறது. அப்படி அது உண்மையாகும் பட்சத்தில் வருகிற கோடை விடுமுறை விஜய் ரசிகர்களுக்கு தரமான ‘சம்பவம்’ ஆக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!