Cinema
தென்னிந்திய டப்பிங் யூனியனில் முறைகேடு: ராதாரவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை ஐகோர்ட் கேள்வி
தென்னந்திய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சந்தா வசூலிக்கப்படுவதாகவும், சங்க நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தொழிற்சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சங்க தலைவர் ராதாரவிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
“பா.ஜ.க பாதையில் செல்லும் த.வெ.க. அரசு ; தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்” : கி.வீரமணி ஆவேசம்!
-
“பட்டப்பகலில் இரட்டைக் கொலை.. என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?” : உதயநிதி ஸ்டாலின் சுளீர் கேள்வி!
-
அவதூறு கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடன்.. மான நஷ்ட ஈடு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஸ்... காரணம் என்ன?
-
‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!
-
‘கரூர் கொடுந்துயரத்தின் ஒராண்டு நிறைவு.. மனிதத் தன்மையற்ற விஜய்’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!