Cinema
அனிருத் இசையில் மீண்டும் பாடுகிறாரா விஜய்? - ‘விஜய் 64’ லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து டெல்லியில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், பிரேம், ஆண்ட்ரியா, ரம்யா, ‘பவி டீச்சர்’ ப்ரிகிதா எனப் பலர் நடிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பில் விஜய் நடிப்பது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், விஜய் 64 படத்தில் அனிருத் இசையில் விஜய் ஒரு பாடலைப் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிப்பைத் தவிர நடனம், பாடல் என விஜய் அசத்தி வருவது வழக்கம். அதிலும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளிவரும் படங்களில் அவரே பாடி வருவது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
கடைசியாக வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை விஜய் பாடியிருந்தது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் ‘விஜய் 64’ படத்தில் விஜய் பாடவிருக்கும் பாடலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக, கத்தி படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற செல்ஃபி புள்ள பாடலை விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!