Cinema
ஹிரானியுடன் இணைந்த ஷாருக்கான் : அப்போ அட்லியுடனான படம்? - பாலிவுட்டில் பரபரப்பு தகவல்கள்!
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ‘ஃபேன்’, ‘ஜீரோ’ ஆகிய படங்கள் ஹிட் அடிக்காததால் கடந்த ஓராண்டாக எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். அண்மையில் தமிழில் வெளியான அட்லியின் ‘பிகில்’ மற்றும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படங்களைப் பார்த்த ஷாருக், அதன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அதற்காக இரு தரப்பிடமும் ஷாருக்கான் பேச்சுவார்த்தை நடத்தியதில் வெற்றிமாறன் சூரியை வைத்து எடுக்கவுள்ள படத்தில் கமிட்டானதால் அந்தக் கதவு மூடியது. ஆனால் அட்லி இயக்கத்தில் நேரடி இந்திப் படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று அட்லி சந்தித்தது மட்டுமல்லாமல் சங்கி எனும் பெயரில் படம் உருவாகவுள்ளதாகவும் செய்திகள் பரவின. ஆனால் அது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியில் பிகே, சஞ்சு, 3 இடியட்ஸ் என பல பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் படங்களை கொடுத்த ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ராஜ்குமார் ஹிரானியின் படத்துக்குப் பிறகு அலி அப்பாஸ் ஜாஃபர், அட்லியுடனான படத்திலும் அடுத்தடுத்து ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றான. ஆனால் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஹிரானியின் முன்னா பாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் கால்ஷீட் பிரச்னையால் ஷாருக்கானால் நடிக்க முடியவில்லை. இந்நிலையில், தற்போது இருவரும் இணைந்திருக்கும் செய்தி பல ஆண்டுகளாக சூப்பர் ஹிட்டுக்காக காத்திருக்கும் ஷாருக்கானின் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!