Cinema
விஜய் 64ல் ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா? - ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படக்குழு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்பாடததால் Thalapathy 64 என அழைக்கப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ரம்யா என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் ஷூட்டிங்கிற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளது விஜய் 64 படக்குழு. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே தூண்டி வருகிறது விஜயின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.
இந்நிலையில், விஜய் 64ல் இணைந்துள்ள ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், துணிச்சல் மிக்க பெண்ணாக ஆண்ட்ரியா நடிக்கிறார் என்றும், படத்தில் ஆண்ட்ரியாவுக்கு சண்டைக் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஸ்பெஷலாக சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம்.
ஏற்கெனவே விஷாலின் துப்பறிவாளன் படத்தின் ஆண்ட்ரியா சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பார். பெரும்பாலும் அவர் ஏற்று நடிக்கும் படங்களில் ஆண்ட்ரியா தைரியசாலியாகவே நடித்திருப்பார்.
அதுபோல, விஜய் 64லும் அவரது துணிச்சல் வெளிப்படும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும், டெல்லியில் தீவிரமாக நடைபெற்று வரும் படபிடிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் படக்குழு ஆந்திராவுக்கு செல்லவிருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!