Cinema
‘விஜய்64’ ஷூட்டிங்குக்கு மத்தியில் 65வது படத்தின் கதைக்கு ஓகே சொன்ன விஜய்... இயக்குநர் யார் தெரியுமா?
அட்லியுடனான ‘பிகில்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ‘மாநகரம்’, ’கைதி’ வெற்றிப் படங்களின் இயக்குநரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தனது 64வது படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘விஜய் 64’ படத்தை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, படத்தின் படபிடிப்புப் பணிகள் சென்னை டெல்லி என தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜனவரி 1 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விஜய்யின் 64வது படம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவெனில், ‘தடையறத்தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி ‘விஜய் 65’ படத்தை இயக்கவுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தளபதி 64 படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய்யிடம் மகிழ் திருமேனி அடுத்த படத்துக்கான கதையை கூறியுள்ளதாகவும், அதற்கு விஜய் ஓகே சொல்லியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகில் படம் வெளியாவதற்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான படத்தில் நடிப்பது உறுதியாகி பூஜையும் நடத்தப்பட்டது. தற்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் முடிவடைவதற்கு முன்பே அவரது அடுத்த படத்தின் அப்டேட் வந்துள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
தொடர்ந்து கமர்ஷியல் கதைகளை கொண்ட படத்தில் நடித்து வந்த விஜய், தற்போது இளம் இயக்குநர்களின் படைப்பில் நடிக்க முடிவெடுத்திருப்பது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.
‘விஜய் 64’ படம் ஏப்ரல் 14ல் வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளதால், அந்தப் படம் ரிலீஸானதும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விஜய் 65 படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மகிழ் திருமேனியுடனான இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கோபிநாத் பணியாற்ற இருக்கிறார். இவர் ஏற்கெனவே விஜய்யின் கில்லி மற்றும் குருவி படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் விஜய் 65 படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !