Cinema
டெல்லியில் விஜய் 64 ஷூட்டிங் விறுவிறு - தினந்தோறும் இன்ஸ்டா அப்டேட் தரும் நாயகி! (Photo Album)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீமன், சேத்தன், அழகம் பெருமாள், கவுரி கிஷன், தொகுப்பாளர் ரம்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் முதல்கட்ட ஷூட் சென்னையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், டெல்லியில் இரண்டாம்கட்ட ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு நிலவி வரும் நிலையில் படபிடிப்பு பணிகளில் விஜய் 64 படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில்,கடந்த 6ம் தேதி டெல்லி ஷூட்டிங் பணியில் இணைந்த நடிகை மாளவிகா மோகனன் விஜய் 64 படம் குறித்து நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகவும், பதிவாகவும் போஸ்ட் செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை படம்பிடித்து பகிர்ந்து வருகிறார்.
இது விஜய் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் அவருக்கு இருக்கும் ரசிகர்களுக்கும் மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என பட தயாரிப்பு நிறுவனமான XB Film Creators அறிவித்திருந்தது. மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”