Cinema
போலிஸாக நடிக்கும் ஐந்தாவது படம்... தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்!
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் படம் தர்பார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மூன்று முகம், பாண்டியன், நாட்டுக்கொரு நல்லவன், கொடி பறக்குது போன்ற படங்களுக்குப் பிறகு தர்பார் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இதனாலேயே ரஜினி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தர்பார் பட போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு வந்தது.
அதன் பிறகு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மோஷன் போஸ்டர்கள் முறையே கமல், மகேஷ்பாபு, மோகன் லால், சல்மான் கான் ஆகியோரால் வெளியிடப்பட்டன.
மோஷன் போஸ்டர் வெளியாவதற்கு முன்பே ட்விட்டரில் #DarbarMotionPoster என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பெற்றது. அதன் பிறகு வீடியோ வெளியானதும் #DarbarPongal மற்றும் #DarbarThiruvizha ஆகிய ஹேஷ்டேக்குகளும் முறையே இரண்டு, மூன்று வரிசையில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
இதற்கிடையே தர்பார் மோஷன் போஸ்டரில் ரஜினி வின்டேஜ் ஸ்டைலில் உள்ளதைக் குறிப்பிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தர்பாரில் ரஜினிகாந்தின் பெயர் "ஆதித்யா அருணாச்சலம்" என உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த படத்தின் மவுசு இன்றளவும் குறையாதிருக்கும் நிலையில் மீண்டும் தர்பார் படத்தில் அருணாச்சலம் பெயர் இடம்பெற்றுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!