Cinema
‘சிங்கப்பெண்ணே’ ஸ்பெஷல் ஷோ... பெண்கள் குழந்தைகளுக்காக ‘பிகில்’ சிறப்புக் காட்சி!
விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிவரும் படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கிறது.
‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சுமார் 180 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது.
ஏற்கனவே படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்ட படத்தின் டீஸர், சிங்கப்பெண்ணே, வெறித்தனம், உனக்காக ஆகிய பாடல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘பிகில்’ படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் பெண்களுக்கென ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாபு சினிமாஸில் நாளை மறுதினம் (அக்டோபர் 26) பிற்பகல் 2 மணிக் காட்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கு சென்னை திருவான்மியூரில் இது போன்றதொரு பெண்களுக்கான சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!