Cinema
இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கிய நடிகர் சூர்யா!
சமீப காலங்களாக முன்னணி நடிகர்கள் பலர் தமிழ் திரைப்பட சங்கங்களுக்கு நிதியளிப்பதும், படம் வெற்றி பெற்றதும் படக்குழுவினருக்கு பரிசளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அண்மையில் வெளியான காப்பான் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்ததால் தன்னுடைய படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா தங்கக்காசுகள் கொடுத்து மகிழ்வித்திருத்திருந்தார்.
அதேபோல, சுதா கோங்கரா இயக்கத்தில் நடித்து வந்த சூரரைப் போற்று படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும் அந்த படக்குழுவினருக்கும் தங்கக் காசு கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு நலத்திட்ட உதவியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சூர்யா தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி. உதயக்குமாரிடம் நன்கொடையாக அளித்துள்ளார்.
Also Read
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!
-
‘சமூகநீதி நாள்’ - அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்புகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!