Cinema
விஜய்யின் பிகில் டீஸர் எப்போது? அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி...குஷியில் ரசிகர்கள்!
அட்லீ, விஜய் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை எ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 22ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்னும் டீசர், ட்ரெய்லர் குறித்த எந்த தகவலும் வெளியாக வில்லை. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் டீசர் எப்போது வரும் என ட்விட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் டீசர் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அர்ச்சனா, 'பிகில் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வரும் திங்கள் அன்று அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!
-
தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!