Cinema
கல்லீரல் பிரச்னையால் காலமான பிரபல நகைச்சுவை நடிகர் : தெலுங்கு ரசிகர்கள் வருத்தம் !
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 39. கடந்த 1996-ம் ஆண்டு 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் வேணு மாதவ்.
இவர் இதுவரை 170 க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'டாக்டர் பரமானந்தய்யா ஸ்டூடண்ட்ஸ் கேங்’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேணு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் வேணு மாதவின் மறைவுக்கு தெலுங்கு ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!