Cinema
நடிகர் அஜித்தின் விவேகம் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2017ம் ஆண்டில் வெளியான திரைப்படம் விவேகம். இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து இருந்தார்.
மலேசியாவில் விவேகம் படத்தை திரையிட 4.25 கோடி ரூபாய் தங்களிடம் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனத்திற்கு உரிமையை வழங்கி விட்டதாக மலேசியாவை சேர்ந்த டி.எஸ்.ஆர். நிறுவனம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தது.
அந்த மனுவில், கடந்த 2017ம் ஆண்டில் இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், அந்தப்புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்தரம் உள்ளது எனக் கூறி, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!