Cinema
படப்பிடிப்புக்கு தடை விதித்த நீதிமன்றம்... அதிரடி முடிவெடுத்த கே.ஜி.எஃப்-2 படக்குழு..!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் கே.ஜி.எஃப். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் யாரும் எதிர்பாராத வகையில், 200 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்தது.
தற்போது கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகும் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
இப்படத்தின் கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பால் அந்த பகுதியின் சுற்றுப்புறசூழல் மாசுபடுகிறது என சமூக ஆர்வலர் சீனிவாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கே.ஜி.எஃப் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் எஞ்சிய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
Also Read
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக துணை போகும் அதிமுக : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!