Cinema
அர்ஜுன் ரெட்டியை தொடர்ந்து மற்றொரு ரீமேக் படத்தில் ஷாஹித் கபூர்... ஹீரோயின் யார் தெரியுமா?
தெலுங்கில் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் நானி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான படம் ‘ஜெர்ஸி’. இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 'ஜெர்ஸி' படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.
இப்படத்தை தமிழில் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளார். ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை நடிகர் ராணா தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவர்கள் இருவரும் ‘ராட்சசன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜெர்ஸி படத்தின் பாலிவுட் ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக்கான `கபீர் சிங்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் கார்த்தியுடன் ஒரு படம், தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ்பாபுவுடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!