Cinema
சாதியக் கொடுமைகளை பேசிய பாலிவுட் பட ரீமேக்கில் அஜித்- தல 61ல் மீண்டும் இணைகிறதா நேர்கொண்ட பார்வை குழு?
சமூகத்தில் நடைபெறும் பாகுபாடுகள், சாதிய கொடுமைகள் மற்றும் ஆணவ படுகொலைகள் பேசும் ’ஆர்ட்டிக்கள் 15’ படம் பாலிவுட்டில் வெளியானது. ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.
தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தில் நடித்ததற்கு பிறகு ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள இந்த ’ஆர்ட்டிகள் 15’ படம் இந்தி சினிமாவில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெருவாரியான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தியில் வெளியான ’பிங்க்’ படத்தின் ரீமேக்காக தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை வெற்றிக்கூட்டணியே ’ஆர்ட்டிகள் 15’ ரீமேக்கை கையில் எடுக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியான ஆர்ட்டிகள் 15 படத்தை பார்த்த அஜித், அதனை தமிழில் ரீமேக் செய்து நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படம் ஹிட் ஆனதுக்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் தனது 60வது படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிற நிலையில், மீண்டும் ரீமேக்கில் அஜித் ஆர்வம் செலுத்தியுள்ளார்.
இந்த படத்தையும் எச்.வினோத்தே இயக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமிழ் ரீமேக்கின் உரிமம் போனி கபூரின் வசம் இருப்பதால் அஜித் நடிப்பதற்காக சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது.
எனவே, அஜித்தின் 61வது படமாக ஆர்ட்டிகள் 15 ரீமேக் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதற்கிடையில் வெற்றிமாறனின் அசுரன், பட்டாஸ் படபிடிப்பு, கார்த்திக் சுப்புராஜ், மாரிசெல்வராஜ், ராட்சன் இயக்குநர் ராம்குமார் ஆகியோரின் இயக்கங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஆகையால் ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கும் வாய்ப்பு குறைவே என தெரிவிக்கப்படுகிறது.
Also Read
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’!: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
“தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட் Black and Red தான் ; 2.0 ஸ்டார்ட்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
விவசாயிகளின் உரிமைக்கான ”அரிசி” படம் நிச்சயம் வெல்லும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!