Cinema
மீண்டும் காதலில் சிம்பு? - முன்னாள் காதலியின் மனதை உருகவைத்த சிம்புவின் அந்த புகைப்படம்!
நடிகர் சிம்புவுக்கு இந்த வருட ஓபனிங் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. இந்தப் படம் பெரியதாக செல்ஃப் எடுக்கவில்லை. இந்த வருடம் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே சிம்புவுக்கு பெரிதாக எந்த படமும் வெளியாகவில்லை.
தற்பொழுது, கன்னட ரீமேக் படமான மஃப்டியில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துவருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்திலும் சிம்பு இல்லை. அதற்கு பதிலாக மகாமாநாடு என்கிற படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். அதுவும் டேக் ஆப் ஆவதாக தெரியவில்லை.
இப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு ‘வேட்டையன்’ என்கிற படத்தில் நடிப்பதாக இருந்தது. மாநாடுக்கு நடந்தது போல கசப்பான அனுபவத்தால் அந்தப் படமும் கைவிடப்பட்டது. அதற்கு போட்டியாக, வேட்டை மன்னன் என்கிற படத்தை துவங்கினார் சிம்பு. அதுவும் இப்போது வரை என்ன ஆனதென்றே தெரியவில்லை.
இப்படியான சிம்புவின் வாழ்க்கையில், ஒரு புகைப்படம் ஓர் அழகிய அலை, வருடிச் சென்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். சமீபத்தில் குடும்பத்துடன் சிம்பு இருக்கும் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் அனைவரும் ஜோடியாக இருக்க, சிம்பு மட்டும் தனியாக இருந்தார்.
தாய், தந்தையுடன், தம்பி குரளரசனும் அவரது மனைவியும், தங்கை இலக்கியாவும் அவருடைய கணவரும் இருந்தனர். ஆனால் சிம்பு மட்டும் ’சிங்கிளாக’ இருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்த்து, சிம்புவின் முன்னாள் காதலி மனம் உருகிப் பேசியிருக்கிறாராம். அந்த பேச்சு நீண்டு மீண்டும் காதலாக மலரவும் வாய்ப்பிருப்பதாக தகவல் உலாவுகிறது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!