Cinema
கமலுடன் முதன்முறையாக இணையும் முன்னணி நகைச்சுவை நடிகர் : ‘இந்தியன் 2’ லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகிறது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தில் முதல் முறையாகக் கமலுடன் இணைந்து நடிக்க விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக. “தமிழ்த் திரையுலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டேன். ஆனால், கமலுடன் மட்டும் நடிக்க முடியவில்லை” என்று பல பேட்டிகளில் தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் விவேக். இந்நிலையில் அதனைப் போக்கும் வகையில் விவேக்கை 'இந்தியன் 2' படத்துக்கு உறுதி செய்துவிட்டார் இயக்குநர் ஷங்கர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!